பதிவாளர் பிரிவு
1. வினா
வெளி மாகாணத்தில் பிறந்தவர்கள் / இறந்தவர்கள் /விவாகம் செய்தவர்கள் இப்பிரதேச செயலகத்தில் தமது பிறப்பு / இறப்பு / விவாகச் சான்றிதழ்களைப் பெறமுடியுமா?
விடை
ஆம். தற்போது இலங்கை முழுவதற்குமான பிறப்பு / இறப்பு / விவாகச் சான்றிதழ்களைப் பெறமுடியும்.
2. வினா
எந்த வயதுப் பிரிவினரது பிறப்பு / இறப்பு / விவாகச் சான்றிதழ்களை இங்கு எடுக்க முடியும்?
விடை
பொதுவாக 1950 இற்குப் பின்னரும் 2014 இற்கு முன்னரும் பிறந்தவர்கள் / இறந்தவர்கள் /விவாகம் செய்தவர்கள்.
3. வினா
பிரதேச செயலகத்தில் சான்றிதழ்கள் சேதமடைந்திருந்தால் என்ன செய்வது?
விடை
கொழும்பு மத்திய பதிவேட்டறையிலிருந்து 12(1) பிரதிகளைப் பெறமுடியும்.
4. வினா
காலங்கடந்த இறப்புகளைப் பதிய முடியுமா?
விடை
முடியும். 25 வருடங்களுக்கு உட்பட்ட இறப்புகளைப் பதிய முடியும்.
5. வினா
காணாமல் போனவர்கள் தொடர்பாக எவ்வகையான சான்றிதழ்களைப் பெறமுடியும்?
விடை
அ. இறந்தவராகக் கருதி மரணச் சான்றிதழ் பெற முடியும்.
ஆ. காணப்படாமைக்கான சான்றிதழ் பெறமுடியும். இது 2 வருடங்களுக்கு ஒரு முறை பிரதிக்கினை செய்பவரால் புதுப்பிக்கப்பட வேண்டும்.
மோட்டார் போக்குவரத்துப் பிரிவு
1. வினா
வாகன உடைமை மாற்றத்திற்குத் தேவையான ஆவணங்கள் எவை?
விடை
அ) வலுவிலுள்ள வாகன வருமான வரி
ஆ) வலுவிலுள்ள காப்புறுதிப் பத்திரம்
இ) கிராம அலுவலரினால் உறுதிப்படுத்தப்பட்ட அடையாள அட்டையின் நிழல் பிரதி
ஈ) கிராம அலுவலரினால் உறுதிப்படுத்தப்பட்ட புகைப்படங்கள் 02
உ) பூரணப்படுத்தப்பட்ட படிவம்
2. வினா
வாகன வருமான வரி செலுத்தத் தேவையான ஆவணங்கள் யாவை?
விடை
அ) பதிவுப் புத்தகம்
ஆ) வலுவிலுள்ள காப்புறுதிப் பத்திரம்
இ) புகைச் சான்றிதழ்
3. வினா
புது வாகனத்திற்கு புகைச் சான்றிதழ் தேவையா?
விடை
இல்லை.
4. வினா
வாகன வருமான வரி எவ்வளவு நாட்களுக்கு முன் செலுத்தலாம்?
விடை
20 நாட்களுக்கு முன்
5. வினா
வாகன வருமான வரி கட்டப் பிந்தினால் எவ்வளவு தண்டப்பணம் அறவிடப்படும்?
விடை
வாகன வருமான வரியின் 10%
6. வினா
வெளி மாகாண வாகன வருமான வரியை இங்கே கட்டலாமா?
விடை
இல்லை.
சமூக சேவைப் பிரிவு
1. வினா
முதியோர் அடையாள அட்டை பெறக்கூடிய வயதெல்லை எது?
விடை
60 வயதிற்கு மேல்.
2. வினா
முதியோர் கொடுப்பனவைப் பெறத்தகுதியானவர் யார்?
விடை
70 வயதிற்கு மேற்பட்ட மாதாந்தம் ரூபா 3000 இற்கு குறைந்த வருமானம் உடையோர்.
3. வினா
பொதுசன மாதாந்த உதவிக் கொடுப்பனவு பெறத் தகுதியானவர்கள் யாவர்?
விடை
அ) விதவைகள்.
ஆ) கணவரால் கைவிடப்பட்ட பெண்கள்.
இ) 16 வயதிற்கு குறைந்த அனாதைக் குழந்தைகள்.
ஈ) தனித்து வாழும் முதியோர்.
4. வினா
ஆரஸ்ஸாவ குழந்தைகள் காப்புறுதிக்கு தேவையான ஆவணங்கள் எவை?
விடை
அ) பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பப்படிவம்.
ஆ) பிள்ளையின் பிறப்பு பதிவு புத்தகப் பிரதி.
இ) பாதுகாவலரின் தேசிய அடையாள அட்டை பிரதி.
5. வினா
மாற்றாற்றலுடையோர் உபகரணம் பெறத் தேவையான ஆவணங்கள் எவை?
விடை
அ) பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பப்படிவம்.
ஆ) மருத்துவச் சான்றிதழ்.
இ) பங்கீட்டு அட்டை புகைப்படப் பிரதி.
ஈ) தேசிய அடையாள அட்டை புகைப்படப் பிரதி.
உ) கிராம அலுவலரால் உறுதி செய்யப்பட்ட விண்ணப்பதாரியின் கோரிக்கைக் கடிதம்.
6. வினா
சுயதொழில் கொடுப்பனவு பெறத் தேவையான ஆவணங்கள் எவை?
விடை
அ) பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பப்படிவம்.
ஆ) தேசிய அடையாள அட்டை புகைப்படப் பிரதி.
இ) பங்கீட்டு அட்டை புகைப்படப் பிரதி.
ஈ) கிராம அலுவலரால் உறுதி செய்யப்பட்ட விண்ணப்பதாரியின் கோரிக்கைக் கடிதம்.
உ) இயந்திரம் மற்றும் பொருட்களிற்கு விநியோகத்தர் பற்றுச்சீட்டு.
ஊ) ஆடு, மாடு, வேறு உயிரினமாயின் வழங்கியவரின் பணம் பெற்றுக்கொண்டமைக்கான சிபாரிசுக் கடிதம்.


























