| சமுர்த்திஅபிவிருத்தி திணைக்களத்தின் 2024ஆம் ஆண்டுக்கான நிதி ஒதுக்கீட்டின் கீழ் விசேட வீடமைப்பு வேலைத்திட்டமான ரூபா 750000/= பெறுமதியான ரண்விமண வீட்டுத்திட்டம் 2025.02.17 ஆம் திகதி மதிப்பிற்குரிய உடுவில் பிரதேச செயலாளர் பா.ஜெயகரன் அவர்களால் பயனாளியிடம் கையளிக்கப்பட்டது. இந்நிகழ்வில் உடுவில் பிரதேச செயலக சமுர்த்தி தலைமைப்பீட முகாமையாளர் ம.கியூமன் , கருத்திட்ட முகாமையாளர், வங்கி முகாமையாளர், கருத்திட்ட உதவியாளர், சமூக அபிவிருத்தி உதவியாளர், J/190 இணுவில் வடகிழக்கு கிராம உத்தியோகத்தர், அபிவிருத்தி உத்தியோகத்தர், சமுர்த்தி அபிவிருத்தி உத்தியோகத்தர் , இணுவில் வங்கி கள சமுர்த்தி அபிவிருத்தி உத்தியோகத்தர்கள் , CBO உத்தியோகத்தர் மற்றும் CBO உறுப்பினர்கள் ஆகியோர் பங்குபற்றினார்கள். |